செவ்வாய், 12 நவம்பர், 2013

பாண்டியநாடு - திரைவிமர்சனம்



ரௌடிகள் ராஜ்ஜியத்தைத் தனிமனிதனாக நாயகன் தகர்த்தெறிவது தான் கதை என்றாலும் நாயகன் ஒரு சாது இளைஞனாக வருவது, அந்தச் சாது மிரளக் கூடிய அளவுக்குச், சந்தர்ப்பங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக உருவாக்கி நம்மை “சாதுவே பொருத்தது போதும், பொங்கி எழு என்று குமுற வைத்தது, படத்தின் வெற்றியை உறுதிப் படுத்துகிறது.  விஷால் சண்டைக் காட்சிகளில் சாதுவை தொலைக்காமல் கச்சிதமாகச் சண்டை போடுவதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.



நியூஸிலாந்து, மற்றும் மொரிஷியஸ் கடற்கரை இல்லாமல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் ஒரு பாடல். அதுவும் வித்தியாசம்தான். (80-83 என் மதுரைக் கல்லூரி நாட்களை அசை போட்டேன்.  அதற்கு என் personal thanks.  சென்னை வாசிகளுக்கு, பீச் மாதிரிதான் மதுரை வாசிகளுக்கு மீனாட்சி  கோயில்). அதுபோல “ஒத்தக்கடை பாட்டில் இடையே வரும், லக்ஷ்மி மேனனுடைய ஃபோன் கால், கேலிக்கிடமாகி கதிகலங்கி நின்ற விஷாலைத் துள்ளி ஆட வைப்பதும் ரசிக்கும்படியாக இருந்தது. இழவு வீட்டில் ஒப்பாரிக்குப் பதிலாக இறந்தவரைப் போற்றி ஒரு பாடல்.  அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக நன்றாகத்தான் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாரதிராஜா.



பாரதிராஜா என்ற, சிறந்த இயக்குனரைக் கண்ட நமக்கு பாரதிராஜா என்ற சிறந்த நடிகரை (நல்ல ஒரு அப்பாவை) நமக்கு நம் திரை உலகிற்கு இப்படத்தின் மூலம் தந்ததற்கு இயக்குனர் சுசீந்தரனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.  லக்ஷ்மி மேனனுக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் போனது வருத்தத்திற்குறியது. 

மாட்டுத்தாவணி பஸ்டாண்டில், விஷால் தன் அப்பாதான் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து வில்லனைக் கொல்ல முயன்றவர் என்று தெரிந்ததும், அவரைக் கொல்லக் காத்திருக்கும் வில்லன்களின் ஆட்களிடமிருந்துக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பது ஒரு க்ளமாக்ஸுக்கு சமமான அருமையான காட்சி.  இறுதியில் இருவரும் மாறி மாறி “அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில், மத்தவங்களுக்குத் தெரியாமல் பேசுவதற்கும், செய்வதற்கும், ஆயிரம் இருக்கும் என்று சொல்லும் காட்சி மிக அருமை.


வில்லனைக் கிணற்றில் தள்ளியபின் ஓடிச் சென்றுக் கல்யாணம் பண்ணுவது, நண்பனின் காதலி இறுதியில் எதிர்பாராமல் திடீரென வந்து, நண்பன் கொல்லப்பட்ட செய்தி சொல்லுவது (கொலை நடந்தது எப்போது? ஒரு வருடத்திற்கு முன்பா?), லக்ஷ்மி மேனனையே படம் பார்ப்பவர்கள் மறந்திருக்கும் போது, திடீரென வந்து நண்பனைப் “போடா வெளியே என்று சொல்லி, கதவைச் சாத்திவிட்டு,



விஷாலைக் கட்டிப் பிடித்து தேவை இல்லாமல் பாட்டு பாடுவது (அதுவும் தொப்புளை மறைத்துக் கொண்டு.....எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல, ஆனால்,என் பின் பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு ரசிகனின் கமென்ட் காதில் விழுந்தது. “இதென்னப்பா இது, சிமென்ட் லாரிக்கு டார்பாலின் கட்டினது மாதிரி வயித்தச் சுத்தி ஒரு துணி), இவை எல்லாம் கொஞ்சம் பிசிறினாலும் பாண்டியநாடு காண்போரின் மனதை ஓரளவு சீண்டிய நாடுதான் என்று சொல்லலாம்.




7 கருத்துகள்:

  1. மாட்டுத்தாவணி? அர்த்தம்? காரணப் பெயரா?
    நானும் ஒரு சினிமா விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன்-சினிமாவைப் பார்க்காமல்! மதுரைக்கு தெற்கேயும்...மதுரையை சுற்றியுள்ள் ஊர்களிலும் 2 to 4 வகுப்பு படித்துள்ளேன்

    தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்ல மொய்யிற்கு நன்றி! நம்பள்கி! பிரதி மொய்யும் வைத்து விட்டால் போச்சு !! மாட்டுத்தாவணிக்கு அர்த்தத்தை நீங்களே உங்கள் வழக்கு மொழியில் சொல்லிவிடுங்களேன்! இல்லையென்றால் மதுரைக்காரர் "ஜோக்காளி"யைக் கேட்டால் போச்சு! சினிமா பார்க்காமலேயே நம்பள்கி எழுதி விடுவார்! கேட்கணுமா என்ன?!!!! அதை (ப்ருடா with நக்கல், நையாண்டி) ரசிப்பதற்கும் நாங்கள் காத்திருக்கிறோம்! மிக்க நன்றி வாசித்ததற்கும், பின்னூட்டதிற்கும்.

      நீக்கு
    2. Mattuththaavani was originally far away from Madurai city proper. It was a large open area - a maidanam in Tamil - where there was a regular cattle fair since ancient times. The people in and around Madurai brought, bought and sold their cattle in the maidan. Hence, the name Maattuththaaani. Thaavani in Tamil means fair (or mela). Pl refer to Kazhagath Tamil Agarathi.

      (Similar one existed in Tiruchendur now converted into Tiruchendur Bus station, just like Maattuthavan getting converted into Integrated Bus Station. When it was Maattuthavani, I had seen the cattle fair there. The conversion happened in the 80s only)

      Today, the city has expanded almost up to Othakkadai. Madurai has become a Corporation enclosing the Othakkadai also. It became necessary to encompass as the Government set up the Madurai Bench of Madras High Court near Othakkadai and it would have been embarrassing to the Govt to exclude the High Court area and to bring it under Uthangudi Panchayat.

      நீக்கு
    3. Being an English teacher, you may like to read comments in English as well. Correct?

      Your review is fair and good. Thanks. Seen the film today. I preferred the film to Azhaguraja (Aaarambam having already been seen) as the reviews led me to that decision. I regret the decision.

      An average film with an average story line (hackneyed theme in modern terms), average performances, it is average. Nothing stands in memory when I came out of the hall except the feeling that such films today are bad for society esp. in Madurai. I like Ms Menon. Although you are quire fair to not like her performance and her dress, I liked to see her face in the film only because it is the only redeeming feature in an otherwise wasteful time I had to endure in the hall. My wife commented: We would have gone to Azhagu Raja - at least we could have had some laughter. Regarding Ms Menon, 'she had a charming smile".

      நீக்கு
    4. Sir,Thanks for the comments.The details that you gave,concerning Mattuthavani,are quite informative.I simply said what I felt on seeing the film and I am sorry to know that the film was not up to your expectations.Needless to say that we all have different tastes and different views.That is the reason.So, please,bear with me. Thank you very much for reading our blog.

      நீக்கு
  2. நல்லா எழுதியிருக்கீங்க சார் ரசித்தேன்

    மாட்டுத்தாவணி பஸ்டாண்டில், விஷால் தன் அப்பாதான் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து வில்லனைக் கொல்ல முயன்றவர் என்று தெரிந்ததும், அவரைக் கொல்லக் காத்திருக்கும் வில்லன்களின் ஆட்களிடமிருந்துக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பது ஒரு க்ளமாக்ஸுக்கு சமமான அருமையான காட்சி. இறுதியில் இருவரும் மாறி மாறி “அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில், மத்தவங்களுக்குத் தெரியாமல் பேசுவதற்கும், செய்வதற்கும், ஆயிரம் இருக்கும்” என்று சொல்லும் காட்சி மிக அருமை.

    அதிலும் இதை மிக ரசித்தேன் .விமர்சனம் தொடர்ந்து எழுதுங்கள்

    ன் பின் பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு ரசிகனின் கமென்ட் காதில் விழுந்தது. “இதென்னப்பா இது, சிமென்ட் லாரிக்கு டார்பாலின் கட்டினது மாதிரி வயித்தச் சுத்தி ஒரு துணி”),

    படிக்கும் போது சிரிச்சிட்டேன்

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப ரொம்ப நன்றி சார்! எங்கள் தில்லைஅகத்திற்கு உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும். உங்கள் பதில் தோளில் தட்டிக் கொடுத்தது போல இருக்கிறது சார். சந்தோஷமாகவும் இருக்கிறது ! இது போன்ற ஊக்குவித்தல் தான் எங்கள் டானிக்!!! மீண்டும் மீண்டும் வருக!!

    பதிலளிநீக்கு